ஷாருக்கான் நடிக்கும் 'பதான்'.. விற்றுத் தீரும் TICKETS.. ஒரு டிக்கெட் 2,200 ரூபாய் வரை விலை நிர்ணயம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

Shahrukh Khan Deepika Padukone Pathaan Movie Ticket Booking
Advertising
>
Advertising

ஷாருக்கான்,  இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Shahrukh Khan Deepika Padukone Pathaan Movie Ticket Booking

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வரும் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக உருவாகும் இந்த படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் பதான் படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஐமாக்ஸ் திரையரங்குகளில் பதான் படத்தின் டிக்கெட் விலை 2200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. மும்பையில் 1450 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள சாதாரண திரையரங்குகளில்  200 ரூபாய் வரை ஒரு டிக்கெட் விற்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan Deepika Padukone Pathaan Movie Ticket Booking

People looking for online information on Deepika Padukone, Imax, Pathaan Tickets, Shahrukh Khan will find this news story useful.