பிரபல ஹீரோவின் மகள், தனக்கு ஏற்பட்ட நிறவெறி சம்பவம் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாகவும் சூப்பர்ஸ்டாராகவும் கொண்டாடப்படுபவர் ஷாருக் கான். இவருக்கு இந்தி மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகள்தான் சுஹானா கான். இவர் தற்போது மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சுஹானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். தனது கருப்பு நிறத்தை சுட்டிகாட்டி வந்த பல கமன்ட்ஸ்களை பகிர்ந்துள்ள அவர், ''எனது 12 வயதில் இருந்தே, இந்த நிறத்துக்காக என்னை கிண்டல் செய்து வருகின்றனர். பலர் என்னை அசிங்கமாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். வெள்ளையாகவும், நல்ல உயரத்தில் இருப்பவர்கள் மட்டுமே அழகு கிடையாது. எனது நிறத்துக்காக நான் சந்தோஷப்படுகிறேன். இந்த நிற வேற்றுமை ஒழிய வேண்டும்'' என அவர் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சுஹானாவின் பதிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகிறது.