அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'.. நயன்தாராவின் வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

Advertising
>
Advertising

Also Read | Cook With Comali 3: "ஹாலிவுட்டில் உருவாகும் பார்த்திபன் படம்.?" - டிவி நிகழ்ச்சியில் அவரே சொன்ன தகவல்.!

விஜய் நடிப்பில் பிகில் படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்கிறார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா முதல்முறையாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கு நயன்தாரா புறப்படும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read | "உங்கள ரொம்ப புடிக்கும்" வெக்கப்பட்டு சிரிச்சிட்டே சொன்ன சிறுவன்.. Priyanka Chopra ரியாக்ஷன் தான் Ultimate

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'.. நயன்தாராவின் வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan Atlee Nayanthara Jawan Movie Shooting

People looking for online information on Atlee, Jawan Movie, Jawan Movie updates, Nayanthara, Shahrukh Khan will find this news story useful.