JAWAN: விஜய் சேதுபதி குறித்த கேள்வி.. ஆச்சரியத்தோடு ஒரே வார்த்தையை ட்வீட் செய்த ஷாருக்கான்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.  இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி, ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சில மாதங்களுக்கு முன் இயக்குனர் அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு ஷாருக்கான் மற்றும் விஜய், அட்லியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக விஜய் சேதுபதி பற்றி கேட்ட கேள்விக்கு, "அற்புதமானவர் அற்புதமானவர்!!" என ட்வீட் செய்து ஷாருக்கான் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan Answered about Vijay Sethupathi Ask SRK

People looking for online information on Shahrukh Khan, Vijay Sethupathi will find this news story useful.