நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 'LEO' Shoot நடக்கும் காஷ்மீர்ல LEGEND சரவணன்.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!
பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் வில்லனாக நடித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான் ஏக் தா டைகர் (2012), டைகர் ஜிந்தா ஹே (2017) , ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்தது. முதல் இரண்டு நாளில் 219.6 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் ஏற்கனவே சாதனை படைத்தது. ஐந்து நாளில் பதான் படம் உலகம் முழுவதும் 543 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் பதான் திரைப்படம் 28 நாட்களில் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் ரிலீஸிலே அதிக வசூல் செய்த படமாக பதான் படம் சாதனை படைத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 623 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் 377 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் யாஷ் ராஜ் அறிவித்துள்ளது.
இதற்கு முன் ஆமிர் கான் நடித்த தங்கல், பாகுபலி இரண்டாம் பாகம், RRR, KGF Chapter 2 ஆகிய படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. ஐந்தாவது இந்திய படமாக பதான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தற்போது கடந்துள்ளது.
Also Read | LEO லோகேஷ் கனகராஜ் உடன் பிரபல மாடல் நடிகை.. இவங்க தானா? வைரல் பதிவு..!