தளபதி விஜய் கூட ஒரு படம்..? ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் வைரல் பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான், தளபதி விஜய்யுடன் ஒரு படம் இணைந்து நடிப்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | விஷூவல் அனுபவத்துக்காக கூடுதல் பணி... தள்ளி போகும் பிரபாஸின் ஆதி புருஷ்.!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான், கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஷாருக்கான் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது வீட்டில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்து ஷாருக்கான் கையசைத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவின.

பிறந்தநாளுக்கு பின்னர் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக்கான், ரசிகர்கள் ட்விட்டர் வாயிலாக எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இச்சூழலில் ஒரு ரசிகர், "நீங்கள் இருவரும் (விஜய் & ஷாருக்கான்) சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை நாங்கள் பார்க்கும் போதெல்லாம் நடிகர் விஜய் & நீங்கள் (ஷாருக்கான்) இருவரும் பரஸ்பரம் மிகுந்த மரியாதையுடன் இருப்பதை உணர்கிறோம். விஜய் - ஷாருக்கான் கூட்டணியை எப்போது எதிர்பார்க்கலாம் மற்றும் நடிகர் விஜய் பற்றிய உங்கள் எண்ணங்கள் குறித்து பகிருங்கள்" என ட்வீட் செய்து கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், "விஜய் உண்மையிலேயே அருமையான மனிதர். திரைப்படங்கள் என்பது அவை நிகழும் போது தான் நடக்கும்" என பதில் அளித்துள்ளார்.

Also Read | KAMAL HAASAN : இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டர்.. இது ஆண்டவர் BIRTHDAY ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Reply about Film with Thalapathy Vijay

People looking for online information on Shah Rukh Khan, Vijay will find this news story useful.