மெக்காவுக்கு புனித பயணம் செய்த ஷாருக்கான்.. இஹ்ராம் அணிந்து பிரார்த்தனை! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

Shah Rukh Khan in Ihram for Umrah at Mecca Masjid
Advertising
>
Advertising

Also Read | DSP : இது நல்லாருக்கே..!! பிரபல இளம் ஹீரோவுக்கு வில்லனா நடிக்க Ok சொன்ன விஜய் சேதுபதி..

ஷாருக்கான், கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லியின் இயக்கத்தில் ஜவான் படமும் ஜூன் 2 ஆம் தேதி வெளிவரவுள்ளது. சமீபத்தில் ஷாருக்கான்,  DUNKI படத்தின் படப்பிடிப்புக்கு சவுதி அரேபியா சென்றார்.

ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து DUNKI என்ற இந்த படத்தை தயாரிக்கின்றன. Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கவுள்ளார். 
2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் நடைபெற்றது. சவுதி அரேபியா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் ஷாருக்கான் தனது முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் சவுதி அரேபியா அரசுக்கும், கலாச்சார அமைச்சகத்துக்கும், சவுதி மக்களுக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும் Dunki படத்தின் சவுதி அரேபியா படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் கூறினார்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு ஷாருக்கான் இஹ்ராம் அணிந்து உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. மேலும் இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

Also Read | மலேசியால மாஸ் காட்டப்போகும் துணிவு.. தியேட்டர் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan in Ihram for Umrah at Mecca Masjid

People looking for online information on Ihram, Mecca Masjid, Shah Rukh Khan, Shah Rukh Khan in Ihram, Umrah will find this news story useful.