ஷாருக்கான் & தீபிகா படுகோனே நடிக்கும் 'பதான்' படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Also Read | BREAKING: 'கடைசி விவசாயி' இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி? OTT ரிலீஸா? முழு தகவல்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.
ஷாருக்கான் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த வருடம் தான் அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.
இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக உருவாகியுள்ளது. மறைந்த பிரபல இந்தி இயக்குனர் யாஷ் சோப்ராவால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆகும்.
சில நாட்களுக்கு முன் ஷாருக்கான், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.
இந்த படத்திற்காக ஷாருக்கான் பிரத்யேகமாக தலைமுடி வளர்த்தார். மேலும் கடுமையான உடற்பயிற்சி மூலம் 8 பேக் வைத்து நடித்தார். இரண்டு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி உள்ளது. பதான் என்ற ஏஜென்ட்டாக ஷாருக்கான் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் டீஸரில் இடம் பெற்றுள்ளன. ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் டீஸரில் தோன்றியுள்ளனர்.
பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானாம்! அவரே வெளியிட்ட சூப்பர் PHOTOS!