உலகின் உயரமான கட்டிடத்தில் பிறந்தநாள் வாழ்த்து.. 4 வருடமாக மாஸ் காட்டும் ஷாருக்கான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு உலகின் உயரமான கட்டிடத்தில் பிறந்தநாள் வாழ்த்து வீடியோ திரையிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு" - காஜல் அகர்வால் வெளியிட்ட வைரல் PHOTOS!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த வருடம் தான் அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக உருவாகியுள்ளது. மறைந்த பிரபல இந்தி இயக்குனர் யாஷ் சோப்ராவால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆகும்.

சில நாட்களுக்கு முன் ஷாருக்கான், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இப்படத்தின்  முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இந்த படத்தின் முன்னோட்டமும் ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு  வெளியாகி உள்ளது.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஷாருக்கான் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது வீட்டில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்து ஷாருக்கான் கையசைத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவின. இந்நிலையில் ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் பிறந்தநாள் வாழ்த்து வீடியோ திரையிடப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு புர்ஜ் கலிஃபாவில் வீடியோ திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

புர்ஜ் கலிஃபா 163 மாடிகளைக் கொண்டது. மேலும் 828 மீட்டர் நீளம் உடையது.

 

Also Read | Abi Navya: கயல் சீரியல் நடிகை அபி நவ்யா வளைகாப்பு.. வைரல் ஃபோட்டோஷூட்!

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Birthday Wish Video on Burj Khalifa

People looking for online information on Burj Khalifa, Shah Rukh Khan, Shah Rukh Khan Birthday Wish will find this news story useful.