BREAKING: ரஜினிகாந்த் - ஷாருக் கான் சர்ப்ரைஸ் சந்திப்பு..? கூட இந்த இயக்குநருமா.? செம அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படங்களுள்  ரஜினிகாந்த் நடிப்பிலான ‘ஜெயிலர்’, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ ஆகிய திரைப்படங்கள் முக்கியமானவை.

Advertising
>
Advertising

இவற்றுள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர்  ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதில் கண்ணாடி அணிந்தபடி ரஜினிகாந்த் ஸ்மார்ட்டாக நின்றுகொண்டிருந்தார். பின்னர் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் யோகிபாபு ஆகியோர் இணைந்தது குறித்த அறிவிப்புகள் வெளியாகின. 

இதேபோல், அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் புதிய படம் ஜவான். பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்கிறார்.  ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரிகான் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னை ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த படிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகரும் ஜவான் திரைப்படத்தின் ஹீரோவுமான ஷாருக் கான், அப்படத்தின் பிரபல இயக்குநர் அட்லீ இருவரும் அதே ஸ்டூடியோவில் நடக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியுள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு பிரத்தியேக தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை ECR- இல் இருக்கக்கூடிய முன்னணி ஸ்டூயோவான, ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய திரைப்படம், சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய திரைப்படங்களும் படமாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan and Atlee met Rajnikanth in Jailer shooting

People looking for online information on Atlee, Jailer, Jawan, Rajinikanth, Shah Rukh Khan will find this news story useful.