“துணிவு-ல வில்லனா நடிச்சிருக்க வேண்டியது”.. ‘வாரிசு’-ல் இணைந்த ஷ்யாம் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விஜய். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "துணிவும், வாரிசும் ஒரே நாள் ரிலீஸ் ஆனா".. எதிர்பார்ப்பை எகிற வைத்த ஷ்யாம்.. Exclusive

வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்திற்கு ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இரண்டு சிங்கிள்களான 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' ஆகிய பாடல்களும் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், துணிவு படத்தில் தனக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி நடிகர் ஷ்யாம் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் ஷ்யாம், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதே போல துணிவு படத்தில் தனக்கு நடிக்க வந்த வாய்ப்பு குறித்து பேசிய ஷ்யாம் "துணிவு படத்தில் Antagonist ஆக நான் தான் நடிக்க வேண்டியது. தளபதி 66 படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் ஆகி, அட்வான்ஸ் வாங்கிய பிறகு ஒரு தேதி லிஸ்ட் எனக்கு அனுப்பினாங்க. திடீர்னு பார்த்தா ஒரு பத்து நாள் இல்லனா ஒரு வாரத்துல வினோத் சார் ஃபோன் பண்ணி, 'ஷ்யாம் சார், துணிவு படத்துல நீங்க வில்லனா நடிக்கணும் நான் விரும்புறேன்' அப்படின்னு சொன்னாரு. பயங்கரமா Excited ஆயிட்டேன். என்னடா, நடந்தா இப்படி நடக்குமா?. அங்க ஒண்ணு, இங்க ஒண்ணு அப்படின்ற மாதிரி.

அஜித் சார் படம் நான் பண்றேன்னு சொல்லி, தளபதி 66 கமிட் ஆயிட்டேன்ங்குறதுனால தேதி எப்போன்னு கேட்டேன். அப்படியே அச்சு அடிச்ச மாதிரி அதே தேதி சொல்றாங்க. கரெக்டா அவங்களும் துணிவு படத்துக்காகவும் செட் போட்டாங்க. நானும் தளபதி 66 நடிக்க ஆரம்பிச்சிட்டேன். 6 மாசத்துல இதே லுக் தான் மெயின்டைன் பண்ணும் அப்படிங்குறதுனால பண்ண முடியல. ரொம்ப பீல் பண்ணேன், அஜித் சாரோட படத்துல சந்தர்ப்பம் அப்படின்னு. ஆனா வினோத் சார் வந்து பரவால்ல விடுங்க சார் அடுத்தவாட்டி ஜாயின் பண்ணிக்கலாம்னு சொன்னார்" என ஷ்யாம் தெரிவித்தார்.

Also Read | Bharathi Kannamma : அந்த DNA RESULT-அ நம்பாத... குட்டையை குழப்பிய வெண்பா .. மறுபடியும் மொதல்ல இருந்தா...

“துணிவு-ல வில்லனா நடிச்சிருக்க வேண்டியது”.. ‘வாரிசு’-ல் இணைந்த ஷ்யாம் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shaam about H vinoth phone call after varisu shooting exclusive

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Shaam, Thunivu Ajith, Varisu shooting, Varisu Vijay, Vijay will find this news story useful.