சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். சீரியல் மட்டுமன்றி, நேரம் உள்ளிட்ட சில படங்களில் தொடங்கி வெள்ளித்திரையிலும் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை லக்ஷ்மி வாசுதேவன்.
Also Read | விக்ரம் டூ இந்தியன்-2 TRANSFORMATION.. விலையுயர்ந்த காரை டிரெய்னருக்கு பரிசளித்த கமல்ஹாசன்! மாஸ்
இவருடைய மொபைல் எண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றதாக வந்த மெசேஜை கிளிக்செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு ஆப் டவுன்லோடு ஆகி, அதனால், இவருடைய போன் ஹேக் ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து ஆபாசமாக வாய்ஸ் நோட் அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள். பணம் தரவில்லை என்றால் அந்த போனில் உள்ள வாட்ஸ் ஆப் காண்டாக்டில் இருக்கும் பலருக்கும் அவருடைய மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனுப்புவதாக கூறியுள்ளார்கள். கூறியபடியே அப்படி செய்துமிருக்கிறார்கள். இதனால் அழுதபடி உருக்கமான வீடியோவை லக்ஷ்மி வாசுதேவன் பதிவிட்டுள்ளார்.
அதில், “என்னைப் பற்றிய தவறான போட்டோகிராப் மார்ஃப் செய்யப்பட்டு வேறொரு புது நம்பரில் இருந்து என்னுடைய வாட்ஸ் அப் காண்டக்ட் அனைவருக்கும் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. (அழுகிறார்) என்னுடைய நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவருக்கும் அந்த புகைப்படங்கள் சென்றிருக்கின்றன.
என் பற்றி என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். நான் யாரையும் சொல்ல விரும்பவில்லை. தயவு செய்து இப்படியான மெசேஜ்கள் வந்தால் அதை கிளிக் செய்து அவற்றை டவுன்லோட் செய்யாதீர்கள்.. இது அனைவருக்கும் தெரிய வேண்டும், இதனால் பல விளைவுகள் உருவாகும். பலரும் இதனால் தற்கொலை செய்து கொள்கிறார்கள், எத்தனை தைரியமான பெண்ணாக இருந்தால் இப்படியான சூழ்நிலையை சந்திக்கும்போது ஒருநொடி உடைந்துவிடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி இச்சம்பவம் ஹைதராபாத் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ள லக்ஷ்மி வாசுதேவன், “யாரும் இதுபோன்ற மெசேஜ்களை கிளிக் செய்ய வேண்டாம், தவறான வாட்ஸ் ஆப் நம்பர்களில் இருந்து அப்படியான மெசேஜ்கள் வந்தால் ரிப்போர்ட் செய்துவிடுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இவ்விஷயத்தில் அனைவரின் உறுதுணையும் தமக்கு தேவை என்று கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
Also Read | Ponniyin Selvan : நந்தினியுடன் பழுவேட்டரையர்கள்... "one more கேட்கா egoவுடன்.." பார்த்திபன் பகிர்ந்த BTS