"இவங்க கிட்ட வேல பாக்காதீங்க.." EX பாரதி கண்ணம்மா நடிகை பரபரப்பு போஸ்ட்.. "யார சொல்றாங்க"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல், வாராவாரம் பல பரபரப்புகளைக் கடந்து, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

”ஜூலிக்கு டோஸ் விட்ட பிக்பாஸ்”.. கன்பெஷன் ரூமில் சொன்ன வார்னிங்கே கொடுத்துட்டாரு மனுசன் BBUltimate

இதனிடையே, பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை ஒருவர் போட்டிருந்த இன்ஸ்டா ஸ்டோரி, அதிகம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அஞ்சலி கதாபாத்திரம்

பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி. ஆரமபத்தில் வில்லியை போன்று ஒரு கதாபாத்திரம் கண்மணிக்கு வடிவைக்கமாப்பட்டிருந்த நிலையில், மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். குறிப்பாக, அகிலன் - அஞ்சலி ஜோடியின் காட்சிகள், பலரின் விருப்பப்பட்டதாகவும் இருந்தது.

ரசிகர்கள் கருத்து

ஆனால், போக போக அஞ்சலி கதாபாத்திரத்தில் ஒரு தாக்கம் இல்லை என உணர்ந்த ரசிகர்கள், அது பற்றி கருத்து தெரிவித்து வந்தனர். தொடர்ந்து, பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து, கண்மணியும் விலகியிருந்தார். தனது கதாபாத்திரத்திற்கான ரோல் அதிக தாக்கம் இல்லாமல் போனதால் தான், அவர் தொடரில் இருந்து விலகியிருக்கக் கூடும் என்றும் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

பரபரப்பை உண்டு பண்ணிய 'ஸ்டோரி'

இதன் பிறகு, ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் குயின்' என்ற நிகழ்ச்சியிலும் கண்மணி பங்கெடுத்திருந்தார். மேலும், ஒரு சீரியல் ஒன்றிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கண்மணி. இந்நிலையில் தான், தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.

வேலை செய்யாதீர்கள்

அதில், "தப்பான ஆட்களுக்காக  ஒருபோதும் வேலை செய்யாதீர்கள்" என்ற ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டுள்ளார். எதற்காக இப்படி கண்மணி குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் ஆலோசித்து வந்த நிலையில், அதன் பின்னணி பாடல் தான் பலரை பரபரப்பு அடையச் செய்துள்ளது. 'பாரதி கண்ணம்மா நீ' என தொடங்கும் பாடல் ஒன்றை தன்னுடைய ஸ்டோரியில் கண்மணி இணைத்துள்ளார்.

பிரச்சனை என்ன?

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து, கண்மணி விலகியதையடுத்து, தற்போது தப்பான ஆட்களுடன் எப்போதும் வேலை செய்யாதீர்கள் என்பதைக் குறிப்பிட்டு, பாரதி கண்ணம்மா என்ற பாடலையும் இணைத்துள்ளதால், ரசிகர்கள் சீரியலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டதால் அதனைக் குறிப்பிட்டு பேசுகிறாரா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இன்னொரு பக்கம், வேறு காரணங்கள் ஏதாவது இருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

காமெடி பண்ண ஆளு, இப்ப ஃபுல் ரொமான்ஸ்ல.. முத்தம் கேட்டு வெட்கப்பட்ட பரிதாபங்கள் சுதாகர்

"இவங்க கிட்ட வேல பாக்காதீங்க.." EX பாரதி கண்ணம்மா நடிகை பரபரப்பு போஸ்ட்.. "யார சொல்றாங்க" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Serial actress kanmani manoharan insta story gone viral

People looking for online information on Kanmani Manoharan, Serial Actress, Serial actress kanmani manoharan will find this news story useful.