திருமணத்துக்கு பின் இளம் சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்.! வாழ்த்தும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய காலகட்டத்தில், சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஏராளமான நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில், "கேளடி கண்மணி" என்னும் தொடர் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் அறிமுகம் ஆனவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

Serial actress Divya Shridhar and arnaav expecting baby
Advertising
>
Advertising

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதற்கு அடுத்தபடியாக, திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்த "மகராசி" தொடர், ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.

Serial actress Divya Shridhar and arnaav expecting baby

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனான SSR ஆர்யன் நாயகனாக நடிக்கும் இந்த தொடர் சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் நாயகியாக நடித்துவந்த திவ்யா ஸ்ரீதர் பின்னர், அதிலிருந்து விலக, இந்த சீரியலில் நடிகை ஸ்ரீத்திகா தற்போது நாயகி "பாரதி" கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதனிடையே, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "செவ்வந்தி" எனும் தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். நடிகர் மற்றும் டான்ஸரான ராகவ், இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே "செவ்வந்தி" சீரியல், பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரும், "கேளடி கண்மணி" தொடரில் தன்னுடன் இணைந்து நடித்திருந்தவருமான அர்னவ் என்பவரை திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு பல சீரியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக, தன் கணவர் அர்னவ்வுடன் இருக்கும் புகைப்படத்  தொகுப்பை பகிர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர், "2017 ஆம் ஆண்டில் இருந்து கேளடி கண்மணி தொடர் மூலம் எங்களது அழகான பயணம் ஆரம்பமானது. நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம். இப்போது வரை அந்த புரிதல் நீடிக்கிறது. இறுதியில், எங்கள் வாழ்க்கையை ஒன்றாக பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம். 5 வருடம் ஒன்றாக இருந்து, அன்பு, கவனிப்பு, சண்டைகள், விவாதங்கள் என இருந்த போதும் நாங்கள் அதிர்ஷ்டமுள்ள ஜோடிகள் என்று தான் நினைக்கிறேன். மேலும், இரண்டு முறைப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஏராளமான நல்ல உள்ளங்களால் நாங்கள் ஆசீர்வாதமும் பெற்றோம்.

மேலும், எங்களின் கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைத்து வாழ்க்கையின் பெரிய இலக்கை அடைந்தோம். இப்போது எங்கள் வாழ்வின் அற்புதமான பகுதியில் காலடி எடுத்து வைக்கவுள்ளோம். விரைவில் எங்கள் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம். காதலர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக அன்புடன் இதனை பேணுவோம். எனக்கும், என் குடும்பத்திற்கும் நீங்கள் கொடுத்த அளவில்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்களும் சக நடிகர்களும் திவ்யா ஸ்ரீதருக்கும், திவ்யா ஸ்ரீதர் - அர்னவ் தம்பதியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Serial actress Divya Shridhar and arnaav expecting baby

People looking for online information on Arnaav, Divya Shridhar, Keladi Kanmani, Serial Actress will find this news story useful.