ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏறக்குறைய 70 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசிம் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அசிமை பொறுத்தவரை மற்றவர்கள் கோபப்பட்டு கத்தும் பொழுது ஓடி சமாதானப்படுத்தவும் அவர்களின் சண்டையை விலக்கி விடவும் செய்வார். ஆனால் தான் கோபப்பட்டு கத்தும் பொழுது டென்ஷன் அதிகமாக ஆகும் போது தன்னையே மறந்த நிலைக்கு சென்று விடுவார். இவை அவர் குறித்த பார்வையாளர்கள் மற்றும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸின் இயல்பான கருத்தாக உள்ளது.
சமீபத்தில், சாப்பிடாமல் இருந்தது, அதிக டென்ஷன், கோபம், சக்தியின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக அசிம் திடீரென மயங்கி விழ, அவரை சக ஹவுஸ் மேட்ஸ் ஓடி வந்து தண்ணீர் தெளித்து தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போதுதான் அவருக்கு உயர் அழுத்தம் 190 வரை தென்படுவதாக சொல்லி, மெடிக்கல் ரூமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஜனனி எலிமினேஷனுக்கு முன்னதாக அசிம் குறித்து பேசிய கமல், “ஒருவரின் தொழிலைக் குறிப்பிட்டு கிண்டல் செய்வதை நீங்கள் ஒரு பழக்கமா வைத்துள்ளீர்கள். அது இங்கே வேண்டாம். மணிகண்டா சொன்ன மாதிரி நாம ஏன் ஒரு ‘சுமூகமான சமூகமா இருக்கக்கூடாது?’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகை தேவிப்பிரியா, அசிம் குறித்து நிறையவே பகிர்ந்துள்ளார். அஜித் நடித்த வாலி திரைப்படம் தொடங்கி பல திரைப்படங்களில் நடித்த தேவிப்பிரியா, 90களின் புகழ்பெற்ற சீரியல்களான விக்ரமாதித்யன் தொடங்கி, தற்போது தேவயானி நடிக்கும் ஜீ தமிழ் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் வரை நடித்துவருகிறார் நடிகை தேவிப்பிரியா. சன் டிவி பூவே உனக்காக சீரியலில் தேவிப்பிரியா வில்லி ரோலில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் அசிம் குறித்து தமது பேட்டியில் பேசிய நடிகை தேவிப்பிரியா, “அசிம் எனக்கு பால்ய நண்பர் கிடையாது. என் கணவரின் சீரியலில் அசிம் நடித்தார். சன் டிவி பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் அருண் நடித்து வந்தார். அவர் சீரியலில் இருந்து விலக, பின்பு அசீம் நடிக்க தொடங்கினார். அவர் வரும்போது அவர் போட்ட கண்டிஷன்கள் அவர் விதித்த நிபந்தனைகள் அனைத்துக்கும் இசைந்து கொடுக்கும் நிலையில் புரொடக்ஷன் இருந்தது.
அவரோ ஓரிடத்தில் மிகவும் பொருந்தாத ஒரு வசனத்தை சொந்தமாக பேசினார். நான் அது பற்றி கேட்டபோது, இது குரானோ பைபிளோ கிடையாது. வசனத்தை நான் சொந்தமாகதான் பேசுவேன் என்று கூறினார். அதாவது வசனத்தை டெவலப் பண்ணி பேசுவதாக குறிப்பிட்டார். ஆனால் அது டெவலப் பண்ணுவதாகவே இல்லை. அது சம்பந்தமே இல்லாமல் இருந்தது” என்று குறிப்பிட்ட தேவி பிரியா, அசிமுக்கு ஹீரோயிஸம் ஜாஸ்தி, Attitude காட்டுவார் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய முழு பேட்டியை இணைப்பில் காணலாம்.