விஜய் டிவி சீரியல் முடிஞ்ச கையோட இளையராஜா இசையமைக்கும் புதிய படத்தில் ஹீரோவாகும் நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆதிராஜன்.

இவரது இயக்கத்தில் லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் படம் ‘நினைவெல்லாம்  நீயடா’. இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் ஆதிராஜன்.

கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இந்நிலையில் இவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம்  நீயடா’ என்கிற இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை சீரியலில் தொடக்கத்தில் நடித்தார். பின்னர் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் இயக்குநர் மோகன் ஜி இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவி சின்னதம்பி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் அண்மையில் தான் முடிவு பெற்றது. 

தவிர, கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். தவிர இப்படத்தில் இளம் நடிகை யுவலஷ்மி, மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

"பியார் பிரேமா காதல்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாச்சார்ஜி இந்த படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார். இப்படத்தின் படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார். முனிகிருஷ்ணா கலை அமைக்கிறார். பாடல்களை பழநிபாரதி, சினேகன் ஆகியோர்  எழுதுகின்றனர். நடன பயிற்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா அளிக்கின்றனர்.

“காதலைக் கொண்டாடிய அழகி, ஆட்டோகிராஃப், பள்ளிக்கூடம், 96 பட வரிசையில் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதையாக இந்தப்படம் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் உருகாத இதயங்களையும் உருக வைத்துவிடும்” என இப்படக்குழு குறிப்பிட்டுள்ளது.

Also Read: அப்டி போடு.. “தல அஜித்தை இயக்க ஆசை”!.. முழு நீள தமிழ் படத்தை இயக்கியுள்ள 12 வயது சிறுவன் பேச்சு!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Serial actor Prajin next feature film Illayaraja musical

People looking for online information on Ilaiyaraaja, Illayaraja, Prajin, Serial Actor, Trending, TVActorPrajin, TVSerial, VijayTelevision will find this news story useful.