நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் திடீரென உடல்நலக் குறைவால் காலமானது அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. தொடர்ந்து தற்போது இறுதிச்சடங்கும் நடந்துள்ள சூழலில், முன்னதாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர்கள் ரஜினிகாந்த், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners
மயில்சாமி மறைவு, தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையுமே கலக்கத்திலும் ஆழ்த்தி உள்ளது.
அந்த வகையில், நடிகர் மயில்சாமியுடனான முதல் சந்திப்பு குறித்து பேசியிருந்த நடிகர் சென்றாயன், "பொள்ளாச்சியில் ஒரு படம் ஷூட்டிங் முடிச்சுட்டு வரும்போது அவருக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. எங்களுக்கு எல்லாம் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகல. அப்ப எல்லாம் நான் கம்பெனி ஆர்ட்டிஸ்ட். அப்ப அவரோட டிக்கெட் கேன்சல் பண்ணி நாங்க எதுவும் கோவிச்சுக்கக் கூடாதுன்னு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு எங்க கூடயே வந்தார்.
ரொம்ப நல்ல மனுஷன், அவர்தான் சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்தது. அவர் கூட நடிக்கும் போது எல்லா டயலாக்கும் அவருக்கு தான் கிடைக்கும். 'அந்த தம்பி பாவம் டயலாக்கே இல்லாம இருக்கான்பா. அவனுக்கு ஏதாவது ஒரு டயலாக் குடுன்னு' சொல்லி எங்களை பேச வச்சு, நடிக்க வெச்சு அழகு பார்த்தார்.
Images are subject to © copyright to their respective owners
திண்டுக்கல் சாரதின்னு ஒரு படம், அந்த டைம்ல வந்து அவருக்கு ஒரு நாள் சம்பளம் 14,000 ரூபாய் எனக்கு ஆயிரம் ரூபாய்ன்னு நினைக்கிறேன். இந்த 14,000 ரூபாய்க்கு திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளம்பட்டியில் ஒரு ஊர்ல பட்டுச்சேலை ரொம்ப ஃபேமஸ். அந்த 14,000 ரூபாய் சம்பளத்தை வாங்கி எங்க எல்லாருக்குமே பட்டுப்புடவை எடுத்து கொடுத்தார். நான் பக்கத்துல இருந்தேன், 'உனக்கு தங்கச்சி இருக்கா இல்ல கல்யாணம் ஆயிடுச்சா'ன்னு கேட்டார். கல்யாணம் ஆகலன்னு சொன்னதும் தங்கச்சிக்கு கொடுன்னு சொல்லி குடுத்தாரு. நேத்து வரைக்கும் மனுஷனா இருந்த அவரு இப்போ சாமியா இருக்காரு.
Images are subject to © copyright to their respective owners
அவர் வந்த டைம்ல வந்து ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் எல்லாம் சம்பளம் வாங்கி இருக்காரு. ஒரு படத்துக்கு எல்லாம் அஞ்சு ரூபா வரைக்கும் சம்பளம் எல்லாம் கொடுத்தாங்கன்னு சொல்லி இருக்காரு. மயில்சாமி அண்ணா அங்க இருந்தாருன்னா எல்லாரையும் கலகலப்பா சிரிக்க வச்சுட்டே இருப்பாரு. அண்ணன் தானம், தர்மம் எல்லாம் நிறைய பண்ணி இருக்காரு. அண்ணே, 2 பசங்க இருக்காங்கண்ணே, ஏதாவது சேர்த்து வைங்கண்ணேன்னு எல்லாம் சொல்லலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா பொள்ளாச்சிக்கு அப்புறம் அண்ணனை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கல" என உருக்கத்துடன் பேசி இருந்தார்.