நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர்.
சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உட்ப்ட பலர் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அதில் இந்திராகாந்தி மட்டுமே காலிஸ்தான் பஞ்சாப் தீவிரவாதிகளை தன் கால் ஷூவால் நசுக்கினார். தன் உயிரைப் பணயம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ் தான் தீவிரவாதிகளை காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக்கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப் போன்ற ஒருவர் தான் அவர்களுக்கு தேவை' என்று பதிவிட்டிருந்தார்.
கங்கனாவின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அகாலி தளத்தின் தலைவரும், டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக்குழு தலைவருமான மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, வெறுக்கத்தக்க கருத் துகளை தொடர்ந்து தெரி வித்து வரும் கங்கனாவை சிறையில் அடைக்க வேண்டும் அல்லது மன நல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதி கள் என்று கூறியது, விவ சாயிகளை அவமதிப்பது போல் இருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவருக்கு எதிராக டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றும் கூறியுள்ளார்.