'டாக்டர்' பட ரிலீசுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'டாக்டர்'.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

பின்னர் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து Soul of Doctor தீம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படம் வெளியாக 5 நாட்களே இருந்த நிலையில் படத்தின் மிகவும் பிரபலமான செல்லம்மா பாட்டின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்நிலையில் படம் வெளியாக 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மிக முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. 

டாக்டர் படம் சென்சார் போர்டு மூலம் U/A சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் படத்தின் நேரம் 2 மணி நேரம் 28 நிமிடம் என தெரிய வந்துள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே சென்சார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

SEMA UPDATE ARRIVES 3 DAYS AHEAD OF DOCTOR RELEASE

People looking for online information on Priyanka Mohan, Siva Karthikeyan will find this news story useful.