"2 மாஸ்டர்கள் ஒரே புகைப்படத்தில்.. படத்தில் இது எந்த சீன்ல வருது?".. ரசிகர்கள் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.

சூர்யா - செல்வராகவன் என இருபெரும் இயக்குநர்கள் இணையும் இந்த படத்துக்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டலான ஸ்னீக் பீக் ஓரிரு நாட்களுக்கு முன்பாக தான் வெளியானது.

அந்த ஸ்னீக் பீக் பலருக்கும் படத்தைக் காணும் ஆர்வத்தை தூண்டிய நிலையில், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இருவரும் ஒரு காட்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இந்த புகைப்படம் படத்தில் வரும் ஒரு காட்சியில் இருந்து எடுக்கப்பட்டதா? என கேள்விகளை எழுப்பி வந்தனர்.

ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ரெஜினாவுக்கும் இப்படி ஒரு காட்சி வருகிறது. எனவே அந்த காட்சியை படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

ALSO READ: "பார்ட்னருக்கு வாழ்த்துக்கள்!".. பிறந்த நாளில் 'செல்வராகவனுக்கு' வாழ்த்து சொன்ன நடிகை!

தொடர்புடைய செய்திகள்

Selvaraghavan SJ Suryah Viral Pic Nenjam Marappathillai

People looking for online information on Nenjam Marappathillai Tamil, Selvaraghavan, Sj suryah will find this news story useful.