தெறிக்கவிட்ட நானே வருவேன் அப்டேட்.. சூப்பர் கூல் தனுஷ்.. இணையத்தை கலக்கும் புதிய போஸ்டர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Selvaraghavan gives Naane Varuven update with Dhanush poster
Advertising
>
Advertising

நானே வருவேன்

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது.

Selvaraghavan gives Naane Varuven update with Dhanush poster

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கீர்த்தி சுரேஷுடன் சாணிகாயிதம் என்ற படத்தில் நடித்து வரும் செல்வராகவன் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் விதம் பிடித்துப்போக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பின்னர் யாமினியும் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியதால், அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

புதிய போஸ்டர்

சில தினங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்நிலையில் இன்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படபிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

நானே வருவேன் படத்தின் நடிக்கும் அதேவேளையில் தனுஷ், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் வாத்தி, (தெலுங்கில் Sir) எனப் பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.  செல்வராகவனும் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட், மற்றும் ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan gives Naane Varuven update with Dhanush poster

People looking for online information on Dhanush, Naane Varuven, Om Prakash, Selva Raghavan will find this news story useful.