மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | காதலர் தினத்தில் வெளியாகும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஆல்பம் பாடல்.. கான்செப்ட் இதுதான்.!.
இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.
சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.
இந்த படம் பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதே தேதியில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படி அண்ணன் தம்பிகளான திரையுலக பிரபலங்கள் செல்வராகவன் & தனுஷ் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருப்பது இருவரது ரசிகர்களிடைடே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷின் பல படங்களை இயக்கியவரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன், “இதெல்லாம் அநியாயம்.. அவர் யாரு.. அது தனிப்படம்.. வேற மாதிரி படம் அது. இது வேற மாதிரி படம்.. அது (வாத்தி படம்) மிகப்பெரிய ஆர்டிஸ்ட், மிகப்பெரிய படம்.. ஆனால் இது (பகாசூரன்) டீம் வொர்க், என் ஃபோட்டோ போடுறாங்களே தவிர, இதில் இயக்குநருக்கும், இன்னும் சகநடிகருக்குமான பங்கு பெரியது. அது ஸ்டார் படம். நாங்க தனியாக முயற்சிப்பது தனிப்படம்.” என குறிப்பிட்டார்.
Also Read | “ஒருவரின் ஹிஸ்டரிய பார்த்தெல்லாம் நடிக்க முடியாது” - மோகன் ஜி படம் குறித்து செல்வராகவன்.!