இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர்.
பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பேட்டி அளித்த இயக்குநர் செல்வராகவனிடம் பார்ட் 2 திரைப்படங்கள் குறித்து கேட்கப்பட்டது. குறிப்பாக 7ஜி ரெயின்போ காலனி பார்ட்-2 வருமா? இதே போல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தனுஷ் நடிப்பில் உருவாகுமா? என்பது போன்ற பேச்சுகள் ஏற்கனவே உருவாகியிருந்தன, இது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இயக்குனர் செல்வராகவன், “பார்ட் 2 என்பது எடுப்பது மிகவும் கஷ்டம். அதை டப்பு டப்பு என யோசிக்க முடியாது. அப்படி எடுக்க முடியாது. நான் அப்படி எடுக்க மாட்டேன். அதற்கான நேரம் தேவைப்படும். அது வரும்போது நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதே போல் செல்வராகவன் யூனிவர்ஸ் என்ற ஒன்று வருமா என்று கேட்கப்பட்ட போது இதற்கு பதில் அளித்த செல்வராகவன், “யூனிவர்ஸ் என்பதெல்லாம் இல்லை, ஆயிரத்தில் ஒருவன் பார்ட் - 2 திரைப்படத்தில் அந்த சிறுவன் என்ன ஆனான் என்கிற கேள்வி இருக்கிறது, என்றால் அதற்கு அதிலேயே பதில் இருக்கிறது. அது மிகவும் சிம்பிளான ஒன்றுதான்.” என்று தெரிவித்துள்ளார்.