மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிரதமரை சந்தித்த KGF யாஷ் & ‘காந்தாரா’ இயக்குநர்..! வைரலாகும் ஃபோட்டோஸ்..
இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.
சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்தில் பிரத்தியேக பேட்டி அளித்த இயக்குநர் செல்வராகவனிடம், “மோகன் ஜி திரைப்படத்தில் நீங்கள் நடிக்க தொடங்கிய உடனேயே பேச்சுக்கள் எழுந்தன. காரணம் மோகன் ஜி இதற்கு முன்னால் பண்ணிய சர்ச்சைக்குரிய படங்களாக பார்க்கப்பட்ட படங்கள்தான். இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இயக்குனர் செல்வராகவன், “நான் அதையெல்லாம் பார்க்கவில்லை. எனக்கு தேவை கேரக்டர் எப்படி இருக்கிறது? டைரக்டருக்கு நான் நடிப்பது பிடித்திருக்கிறதா? எனக்கு அந்த கேரக்டர்/ரோல் பிடித்திருக்கிறதா? என்பதுதான். இயக்குனரின் ஹிஸ்டரி, ஜாக்கிரஃபி எல்லாம் பார்த்து நடிக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கும். நான் உட்பட யாருமே தனியா வந்தது கிடையாது. மற்றபடி இது நல்ல படம். அத்துடன் அவர் நன்றாக பண்ணுவார் என்கிற கான்ஃபிடன்ட்" என்று குறிப்பிட்டார்.
Also Read | காதலர் தினத்தில் வெளியாகும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஆல்பம் பாடல்.. கான்செப்ட் இதுதான்.!.