'இடம் பொருள் ஏவல்' ரிலீஸ் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சி ட்வீட்.. வைரல் BTS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இடம் பொருள் ஏவல்' திரைப்படத்தின் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி படத்தின் ரிலீஸ் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-யில் தனுஷ் நடித்த 'நானே வருவேன்'.. ரிலீஸ் எப்போ? முழு விவரம்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் தயாராகி உள்ள படம் 'இடம் பொருள் ஏவல்'.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 2014-ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பூம்பாறை ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பரவலான கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இந்த டிரெய்லரை கண்டு களித்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "இன்னும் சில தினங்களில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். கடின உழைப்பில் காத்திருப்பில் மக்களை சந்திக்க ஏங்கும் படைப்பு "இடம் பொருள் ஏவல்" விரைவில்......" என சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

இந்த படத்தில் பாண்டி எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆசைத்தம்பி என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிக்கையை சில நாட்களுக்கு முன் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில், “இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால் இப்படத்தை மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்." என தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

Also Read | லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய அமலா பால்.. வைரலாகும் செம போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Seenu Ramasamy tweet about idam porul Yaeval Release

People looking for online information on Idam Porul Yaeval, Seenu ramasamy, Seenu Ramasamy tweet about Idam Porul Yaeval, Vijay Sethupathi will find this news story useful.