“அழகான காதல் கதை”.. மாமனிதனை தொடர்ந்து ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவை இயக்கும் சீனு ராமசாமி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி. அவரது இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்.

Advertising
>
Advertising

Also Read | “துணிவு-ல வில்லனா நடிச்சிருக்க வேண்டியது”.. ‘வாரிசு’-ல் இணைந்த ஷ்யாம் EXCLUSIVE

‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக கேசினோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்திலான தம்முடைய அடுத்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்திலான நல்ல ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் தமது வலைப்பக்கத்தில், “சீனு ராமசாமி அண்ணனுடன் நான் இணையும் எனது அடுத்த படத்தின் அலுவலக பூஜை இன்று நடைபெற்றது. மெஹந்தி சர்க்கஸ் போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டன. இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | Bharathi Kannamma : அந்த DNA RESULT-அ நம்பாத... குட்டையை குழப்பிய வெண்பா .. மறுபடியும் மொதல்ல இருந்தா...

தொடர்புடைய இணைப்புகள்

Seenu Ramasamy Madhampatty Rangaraj joins for next film

People looking for online information on Madhampatty Rangaraj, Seenu ramasamy will find this news story useful.