விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி.
இவரது இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியானது. தற்போது இயக்குநர் சீனு ராமசாமி, மணிரத்னம் குறித்த ஒரு ட்விட்டர் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையாக “பொன்னியின் செல்வன்” திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி, “எல்லோரையும் குளித்து வரச்சொன்னாய் நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய் என்றார் கலைஞர். தன் மகனுக்கு நந்தன் என பெயரிட்டவர் மணிரத்னம் சார்.
பம்பாய், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களால் எதிர்ப்புகள் பார்த்தவர் ஜாதிக்கட்சியினர் சினிமாக்காரர்கள் அவரை சிறுமை செய்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.