"தமிழ்ல மாத்து தம்பி".. H. வினோத்திடம் சொன்ன சீமான்.. தமிழ் இனிசியலுடன் வைரலாகும் துணிவு POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

வரும் 2023 பொங்கலுக்கு (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை கமலா தியேட்டரில் நடந்த வெள்ளி மலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சீமான், "என் தம்பி வினோத், தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை, இப்போ கூட துணிவு எடுத்து இருக்கார்ல. அவரோட பேரு H.    வினோத்னு போட்டார். அப்பறம் நான் சொல்லி முதல் எழுத்தை தமிழில் தாய் மொழியில் போட சொன்னேன். அவர் மாத்திட்டார். இப்போ போஸ்டர்களில் அ. வினோத் என்றே வருகிறது". என சீமான் பேசினார்.

தற்போது இயக்குனர் வினோத், வினோத் ஹரிமூர்த்தி என்ற முழு பெயரை வினோத் அரிமூர்த்தி என மாற்றியுள்ளார். மேலும் துணிவு படத்தின் தமிழ் போஸ்டர்களில் அ. வினோத் என்றே இயக்குனர் H.வினோத் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த தமிழ் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Seeman Talks about Thunivu Director H Vinoth Initial Change

People looking for online information on Aa. Vinoth, H. Vinoth, Seeman, Thunivu will find this news story useful.