நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தை பார்த்த பின் இயக்குனர் & நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படம் குறித்து பேசியுள்ளார்.
Also Read | "இந்திய சினிமாவில் MASTERPIECE".. 'காந்தாரா' படம் பார்த்து வியந்த ரஜினிகாந்த்! வைரல் ட்வீட்
நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்தார் படம் பார்த்த பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படம் பற்றி பேசியுள்ளார். அதில், "சர்தார் படம் ஒரு படிப்பினை. இந்த கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கேன். தண்ணீர் மிகப் பெரிய வியாபார பொருளாக மாற்றப்பட்டுருச்சு. உலக உயிர்களின் உடமை சந்தை பொருளா மாத்துனது.. எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணம்னு புரிய வரும். அதை இந்த படம் ஆழமா விளக்கி சொல்லுது. தம்பி மித்ரன் அவர்கள் தொடர்ச்சியா உலக தரமான படங்களை செய்ய கூடியவர். இரும்புத் திரை படமும் இதேபோல் சமூக பொறுப்பும் பார்வையும் கொண்டது. இந்த படத்தை தயாரித்தது பெரிய விஷயம். தயாரிப்பாளர் தம்பி லகஷ்மன் குமாருக்கு பாராட்டுக்கள். கார்த்தி இரு வேடங்களில் நேர்த்தியாக நடித்துள்ளார். படத்தில் ஒளிப்பதிவு, இசை, உரையாடல் அனைத்தும் சிறப்பாக உள்ளது. சிறந்த படைப்பு" என சீமான் பேசியுள்ளார்.
Also Read | VIDEO: ராஜூ முருகன் இயக்கும் புதிய படம்.. கார்த்தி கேரக்டர் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!