சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் சசிகுமார். இந்த திரைப்படத்தில் அவர் நடிக்கவும் செய்திருந்த சூழலில், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாகவும் சுப்ரமணியபுரம் மாறி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners
சசிகுமார், இயக்குனர் பாலாவிடம் சேது படத்திலும், அமீருடன் மௌனம் பேசியதே, ராம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார். இதனைத் தொடர்ந்து, ஈசன் திரைப்படத்தை இயக்கி இருந்த சசிகுமார், தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
கடந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில், கொம்புவெச்ச சிங்கம்டா, நான் மிருகமாய் மாற, காரி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.
சசிகுமாரின் அயோத்தி
இதனைத் தொடர்ந்து, சசிகுமார் நடித்திருந்த அயோத்தி திரைப்படம், கடந்த மார்ச் 03 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவான அயோத்தி திரைப்படம், சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
இந்த திரைப்படத்தில், சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என். ஆர். ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் அயோத்தி படத்தை தயாரித்துள்ளார்.
அயோத்தியை பாராட்டிய சீமான்
பல பிரபலங்களும் அயோத்தி திரைப்படத்தை பார்த்து கருத்து தெரிவித்து வரும் சூழலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அயோத்தி திரைப்படத்தை பார்த்துள்ளார். தொடர்ந்து, படக்குழுவினரும் உடன் இருந்ததாக தெரியும் சூழலில், அனைவரையும் பாராட்டவும் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான படம்..
அயோத்தி திரைப்படம் குறித்து பேசிய சீமான், "அயோத்தி தமிழ் திரையுலகின் மிக முக்கியமான ஒரு படம். தம்பி சசி வழக்கமா இயல்பான நடிப்பில் அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். என் தம்பி சசிக்கு இது இன்னொரு படிநிலைப் பாய்ச்சல்ன்னு தான் சொல்லனும். வேறொரு நிலைக்கு அவரோட திரையுலக பயணத்தை தள்ளிட்டு போகும்ன்னு தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு சிறந்த படைப்பு.
Images are subject to © copyright to their respective owners
நீங்க படம் பாருங்க, ரொம்ப ஒரு அருமையான உணர்வை உங்களுக்குள்ள கடத்திச் செல்லும். மனம் அன்பில் பூக்கும் போது மதமும், தெய்வங்களும் எதுக்குன்னு கேக்குறாரு, அதுதான் இந்த கதை சொல்லுது. அது என்னன்னா மதம், வேதம், தர்மம் இது எல்லாம் தாண்டி புனிதமானது மனிதம் அப்படின்றது தான் இந்த படம் சொல்லுது. இந்த மாதிரி படத்தை எல்லாரும் பார்த்து கொண்டாடவில்லை என்றால் இன்னொரு அரிய படைப்பு அரிதிலும் அரிதாக போய் விடும்" என தெரிவித்துள்ளார்.