ரஜினி - கமல் உள்ளிட்ட நடிகர்களின் அரசியல் என்ட்ரி குறித்து சீமான் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பிரபலமானவர் சீமான். இதை தொடர்ந்து இவர் நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் நடிகர்களின் அரசியல் என்ட்ரி குறித்து ஆவேசமாக பேசினார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவர், காலா படத்தில் அவர் பேசிய, இது என் நிலம், என் உரிமை என்ற வசனத்தையும் குறிப்பிட்டு பேசினார்.
மேலும் வருகிற தேர்தலில் ரஜினி - கமல் உள்ளிட்ட நடிகர்களை அடிக்கும் அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வரக்கூடாது. இது விஜய் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும். அரசியலில் ஈடுபடாமல், நடித்ததை மட்டுமே கொண்டு தேர்தலை சந்திப்பதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.