கடந்த வாரத்தில் சிறப்பாக விளையாடிய பாலாஜி, ரம்யா பாண்டியன் மற்றும் சிறந்த பெர்பாமன்ஸ் கொடுத்த நிஷா ஆகியோர் நேற்று கேப்டன் பதவிக்காக போட்டியிட்டனர். துண்டு, துண்டாக இருக்கும் தங்களுடைய உருவப்படத்தை இணைத்து கேப்டன் என்னும் வார்த்தையை கொண்டு வர வேண்டும் என்பது தான் டாஸ்க். ஆரம்பத்தில் இருந்தே நிஷா தவறுதலாக அடுக்கியதால் அவரால் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடியவில்லை.
ஆனால் பாலாஜி குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து விட்டார். இதையடுத்து புதிய கேப்டன் பாலாஜிக்கு பிக்பாஸ் வாழ்த்து தெரிவித்தார். மேலும் டீம் பிரிப்பது தொடர்பான வேலைகளை தன்னிச்சையாக செய்யும்படியும் தெரிவித்தார். இதையடுத்து பேச எழுந்த பாலாஜி தான் அந்த டாஸ்க்கில் ஒரு தவறு செய்திருப்பதாகவும், அதனால் ரம்யாவே இதற்கு தகுதியானவர் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பிக்பாஸ் உத்தரவின் பேரில் அனிதா சென்று பரிசோதனை செய்து பாலாஜி தவறு செய்ததை சுட்டிக்காட்டி, ரம்யா சரியாக செய்திருப்பதாக கூறினார். இதைக்கேட்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியனை இரண்டாவது முறையாக கேப்டனாக்கி அழகு பார்த்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒரு தடவ குறும்படம் வந்ததுக்கே இவ்ளோ மாற்றமா? என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
கேப்டன் டாஸ்க்குக்கும் நமக்கும் ராசியே இல்லை போல!