நடிகை ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படத்தினை கோவையில் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கவுதம் ராஜ் இயக்கிய ராட்சசி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.பள்ளிக் கல்வியின் அவசியத்தையும் அரசு பள்ளிகளில் ஏற்பட வேண்டிய மாற்றத்தையும் ஆழமாக பேசியுள்ள இந்த திரைப்படம், ஆதரவை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அபய குழந்தைகளை காப்பகத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டரில் ராட்சசி படத்தை பார்த்து கண்டுகளித்தனர். இதனை மதர் ட்ரஸட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் செய்துள்ளது.
சிறுவர் சிறுமிகளுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் உருவான
ராட்சசி திரைப்படம் அனைத்து பெண் சிறுமிகள் மற்றும் அனைத்து குழந்தைகளும் படம் பார்க்க வேண்டும் என்று இதை ஏற்பாடு செய்திருந்ததாக அந்த குழு தெரிவித்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் ‘ராட்சசி’ திரைப்படத்தை கண்டு மகிழ தயாரிப்பு நிறுவனம்சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. நாளை (ஜூலை.12) முதல் பள்ளி குழந்தைகள் ராட்சசி திரைப்படம் பார்க்க 50% டிக்கெட் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்ய பள்ளி நிர்வகாத்தின் மூலம் திரையரங்குகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.