கணவர் ஆர்யா பிறந்தநாளில்.. தங்களின் குழந்தையை அறிமுகம் செய்த சாயிஷா .. VIRAL POST

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கணவர் மற்றும் நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள மனைவி சாயிஷா, தங்கள் மகளின் புகைப்படத்தையும் முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆர்யா. டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் படங்களை தொடர்ந்து தற்போது முத்தையா இயக்கும் திரைப்படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், படத்திற்கு "காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கிராமத்து கெட்அப்பில், நடிகர் ஆர்யா ஆவேசமாக இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இருகிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை சிதி இட்னானி ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தின் வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக, வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷாவை,  காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு ஆரியானா என பெயரிட்டனர்.

கடந்த சில தினங்கள் முன் டெல்லி சென்றிருந்த நடிகை சாயிஷா, இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் குழந்தை ஆரியானாவும் இருந்தது. குழந்தையின் முழு முகம் தெரியாமல் இடது ஓரம் மட்டும் தெரிவது போல அமைந்திருந்தது.

இந்த நிலையில், தனது கணவர் மற்றும் நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து சாயிஷா, கூடவே தங்களின் மகளின் முகத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஆர்யா, சாயிஷா மற்றும் குழந்தை ஆரியானா ஆகியோர் இருக்கும் புகைப்படமும், ஆர்யா மற்றும் குழந்தை ஆரியானா இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்த சாயிஷா, தனது கேப்ஷனில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே!. நீங்கள் ஒரு சிறந்த கணவர், தந்தை மற்றும் சிறந்த மனிதர். நீங்கள் எங்கள் வாழ்வில் உள்ளதை பெரும் பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம். என்னுடையதாக இருப்பதற்கு நன்றி. நான் என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்! ❤️❤️" என குறிப்பிட்டு, மகள் ஆரியானா இருப்பதையும் அதில் பதிவு செய்துள்ளார்.

ஆர்யா - சாயிஷா தம்பதியரின் மகள் ஆரியானாவின் புகைப்படம், தற்போது ரசிகர்கள் பலரது மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Sayyeshaa introduce their baby girl on husband arya birthday

People looking for online information on Arya, Sayyeshaa Saigal will find this news story useful.