"கடவுள் நம்பிக்கை இல்லாமல் சாமியாரா நடிச்சுருக்கேன்"- ராதே ஷ்யாம் பட விழாவில் சத்யராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும்,  ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம்.

Advertising
>
Advertising

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று  ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது…

படிக்கும் போது மணிரத்னம் சாரும் பிசி சாரும் இல்லையெனில் நாம் கேமரா சாதனங்களுக்கு வெளிநாடுதான் போக வேண்டும் என பேசிக்கொள்வோம். அப்படி ஒரு விசனரியாக ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை  மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என  சொல்லிவிட்டார். நிறைய முன்னேற்பாடுகள் செய்து தான் எடுத்திருக்கிறோம். விஷுவல் பார்த்துவிட்டு எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.

ஜெர்மனியில் பகலில் எடுக்க வேண்டிய காட்சியை எனக்காக நான் சொன்னேன் என, இரவில் எடுத்துள்ளோம். எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்கள். இயக்குநரிடம் நிறைய கதைகள் இருக்கிறது. பூஜா 4 வருடத்தில் நிறைய வளர்ந்துவிட்டார். இந்த கதாப்பாத்திரத்தை மிக ஆழமாக புரிந்து செய்துள்ளார். ஜஸ்டின் லவ் ஸ்டோரிக்கு ஏற்ற மியூசிக் தந்துள்ளார். எல்லோரும் பாரட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

இயக்குநர் ராதா கிருஷ்ண குமார்

பிரபாஸ் உண்மையில் வெரி க்யூட் பாய், அவர் ரொமான்ஸான ஆள் அவரிடம் பழகியபோது இப்படத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார் என தோன்றியது. சத்யராஜ் சாரிடம் இந்த கதை சொன்ன போது என்னைப்பற்றி உங்களுக்கு தெரியுமா எனக்கேட்டார், அவரது நம்பிக்கைகள் பற்றி தெரிந்து கொண்டேன் ஆனால் எனக்காக ஒத்துக்கொண்டு நடித்துள்ளார். இந்தப்படம் தயாரிப்பாளர்கள் இல்லாமல் இவ்வளவு பிரமாண்டமாக  நடந்திருக்காது  அவர்களுக்கு நன்றி. படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும் நன்றி.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது…

பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், பூஜா டார்லிங்கின் டார்லிங், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும், நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது.

இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

1970 களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார், அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மார்ச் 11, 2022 அன்று திரைக்கு வரவுள்ள பன்மொழிப் படமான ராதே ஷ்யாமை, ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sathyaraj speech at radhe shyam tamil nadu press meet

People looking for online information on Pooja Hegde, Prabhas, Radhe Shyam, Sathyaraj will find this news story useful.