ARUN VIJAY AKKA-கு தாய் மாமனாக மாறிய சத்யராஜ்.. திருமண நேரத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமார். ஆரம்பத்தில் நாயகனாக திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

திரையுலகில் நுழைவதற்கு முன்பே விஜய குமாருக்கு திருமணமாகியிருந்தது. விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியருக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்களும், அருண் விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

தொடர்ந்து, சினி உலகில் நுழைந்த பிறகு, நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு வனிதா, ப்ரீதா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.

அனிதா விஜயகுமார்

விஜயகுமாரின் குடும்பத்தில், பெரும்பாலானோர் சினிமா துறையில் தொடர்பு உடையவர்கள் தான். இதில், முதல் மனைவியின் மகளான அனிதா விஜயகுமாருக்கு, சினிமா உலகில் அதிக சம்பந்தம் கிடையாது. அனிதா மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு திருமணம் நடந்த போது, நிகழ்ந்த சுவாரஸ்யம் சம்பவம் ஒன்றை சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் அனிதா விஜயகுமார்.

தாய் மாமன் ஸ்தானம்

நடிகர் விஜயகுமார், சினிமா துறையில் இருந்ததால், அவருடைய மகள் அனிதா விஜயகுமாரின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த சமயம் பார்த்து, அனிதாவின் தாய் மாமன் திருமண சடங்கின் போது, மண்டபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், தாய் மாமன் ஸ்தானத்தில், நடிகர் சத்யராஜ் சடங்குகளை செய்துள்ளார்.

சத்யராஜ் அண்ணா

இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனிதா விஜயகுமார் பகிர்ந்துள்ளார். 'Wedding Diaries.. நான் ஏற்கனவே இதனை குறிப்பிட்டுள்ளேன். திருமண சடங்கின் போது, எனது மாமாவை காணவில்லை. இதனால், சத்யராஜ் அண்ணா தான் தாய் மாமன் ஸ்தானத்தில் நின்று, அனைத்து சடங்குகளையும் எனக்காக செய்திருந்தார்' என நெகிழ்ச்சியுடன் அனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
 



மேலும், போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தினையும், தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களையும், அனிதா பகிர்ந்துள்ளார்.

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜும், அனிதாவின் இன்ஸ்டா பதிவில் கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sathyaraj become thaai maaman for arun vijay sister

People looking for online information on Anitha Vijayakumar, Arun Vijay, Marriage, Sathyaraj, Thaai Maaman, Vijayakumar will find this news story useful.