நடிகர் ஆர்யா தற்போது தனது மனைவி சாயிஷாவுடன் இணைந்து 'டெடி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து இமான் இசையில் என் இனிய தனிமையே மற்றும் நண்பியே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கத்தில் பாக்ஸராக நடிக்கவிருக்கிறாராம். ஆர்யாவின் 30வது படமாக உருவாகவிருக்கும் அந்த படத்துக்காக அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகியது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவரது உடற்கட்டை புகழ்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ''நல்ல ரிசல்டுக்காக நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டி வரும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர் ஒருவர், நடிகர் சதீஷிடம் ஆர்யா மட்டும் உங்களுக்கு பெர்சனல் டிரெய்னரரா இருந்தா என்ன பண்ணுவீங்க.. நினச்சு பார்த்தேன். என்றார். அதற்கு பதிலளித்த அவர், தமிழ் படம் படத்தில் அவர் துப்பாக்கியால் சுடுவதை போன்ற ஃபோட்டோவை பகிந்துள்ளார்.