சசிகுமாருடன் முதல்முறையாக இணையும் வாணி போஜன்.. சூப்பர் இயக்குநருடன் செம கூட்டணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது. 

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இதை தொடர்ந்து இவர் பிசியான ஹீரோவாகவும் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் என இவரது படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. 

இந்நிலையில் தற்போது சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து செம அப்டேட்ஸ் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தை திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார். 

வாணி போஜன் முதல் முறையாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 4 Monkeys நிறுவனம் சார்பில் சத்யம் கிஷோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். நாளை இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக நமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதை தொடர்ந்து இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் சசிகுமார், நடிகைகள் வாணி போஜன், பிந்து மாதவி, இயக்குநர் அனீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இப்படத்திற்கு கவிஞர் பாரதியாரின் பாடல் வரிகளான, 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து இணையத்தில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

 

தொடர்புடைய செய்திகள்

சசிகுமார் - வாணி போஜன் திரைப்படம் | sasikumar vani bhojan new movie exclusive updates

People looking for online information on Anees, Sasikumar, Vani Bhojan will find this news story useful.