"நாடோடிகள் பயணம் தொடரும்"... சமுத்திரக்கனி ட்வீட்டுக்கு சசிகுமார் பளீச் ரீட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 26 இதே நாள் திரைக்கு வந்தது "நாடோடிகள்", திரைப்படம்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு இன்னும் பலரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.

"நாடோடிகள்", திரைப்படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவுற்றிருப்பதை நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையில், இயக்குநர் சமுத்திரக்கனி, " நாடோடிகள் 12 ஆண்டுகள் வெல்வோம்", என்று ட்விட்டரில் சசிகுமாரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமுத்திரக்கனியின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ள சசிகுமார் , "நாடோடிகளின் பயணங்கள் தொடரட்டும்", என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் தமிழ்த் திரைத்துறையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்களில் சசிக்குமார், சமுத்திரக்கனியின் கூட்டணி குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் சிறந்த நண்பர்களாக உலா வருவதோடு பல மேடைகளில் அதை அவர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி, சசிகுமாரின் நட்பு நெகிழ்சியானது என அவர்களது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar tweeted to Samuthirakani continue our friendly journey

People looking for online information on Naadodigal, Samuthirakani, Sasikumar will find this news story useful.