எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல படங்கள் நடிகர் சசிகுமார் கைவசம் உள்ளன. சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அது மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஈசன் படத்தையும் இயக்கினார். அதன்பிறகு சசிகுமார் நடிப்பில் கவனம் செலுத்தி, நடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முந்தானை முடிச்சு'. 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. குடும்பம் குடும்பமாக தமிழக மக்களை தியேட்டருக்கு படையெடுக்க வைத்த ஒரு படம். இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த படம் தற்போது 37 ஆண்டுகள் ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்திலும் சசிகுமார் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து செம அப்டேட்ஸ் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தை திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பற்றின தகவல் தற்போது வெளியாகியுள்ளது. செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த பாடத்தை தயாரிக்க உள்ளனராம். வசூல் ரீதியாகவும் கழுகு படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த காம்போ என்ன செய்ய போகிறாரக்ள் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.