அட்றா... அட்றா... பொங்கலுக்கு திரைக்கு வரும் நம்ம சசிக்குமார் படம்! என்ன படம்னு பாருங்க...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

M.சசிகுமார் நடிப்பில் உருவான 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகிவுள்ளது.

Advertising
>
Advertising

நீண்ட காத்திருப்பு

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் இந்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. சுந்தரபாண்டியன் பட இயக்குனர் S.R.பிரபாகரன் இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் உருவான கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிரெய்லர் செப்டம்பரில் வெளியானது. இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனி, நடிகர் அருண் விஜய் ஆகியோர் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிரைலரை வெளியிட்டனர். 

கூட்டணி

சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் S.R.பிரபாகரன் - M.சசிகுமார் கூட்டணியில் உருவான கொம்பு வெச்ச சிங்கம்டா ப­டத்­திற்கு திபு நைனன் தாமஸ் இசை அ­மைத்­துள்­ளார். ஏகாம்­ப­ரம் ஒளிப்­ப­திவு செய்துள்ளார், சண்­டைக் காட்­சி­களை அன்­ப­றிவ் இரட்டையர்கள் இயக்கியுள்­ள­னர். டான் போஸ்கோ படத்தொகுப்பை கவனிக்கிறார்.

பொங்கல்

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.இவர்களுடன் சூரி, யோகி­பாபு, மறைந்த இயக்­கு­னர் மகேந்­தி­ரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட இந்த படம் தற்போது ரிலீசாக உள்ளது. வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 அன்று வெளியாக உள்ளது. இதனை புதிய போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar Kombu Vacha Singam da movie pongal release

People looking for online information on Kombu Vacha Singam Da, Madonna Sebastian, Pongal Release, Sasikumar, Valimai will find this news story useful.