பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் தர்பாரோடு மோதும் பிரபல ஹீரோவின் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் இன்று (நவம்பர் 29) வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சுனைனா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து நடிகர் சசிகுமார் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், எம்ஜிஆர் மகன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் அந்தோனி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar and Sathyaraj's MGR Magan movie will release Pongal 2020

People looking for online information on MGR Magan, Ponram, Sasikumar, Sathyaraj will find this news story useful.