சசிக்குமார்-சரத்குமார் இணையும் புதுப்பட டைட்டில் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சசிக்குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ திரைப்படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நாநா’ திரைப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பாக பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து மோஷன் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர சசிக்குமார் நடித்துள்ள ‘நாடோடிகள் 2’, ‘கென்னடி கிளப்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar and Sarathkumar starring Naanaa film first look and Motion poster has been released

People looking for online information on M Sasikumar, Naanaa, Sarathkumar will find this news story useful.