“ரஞ்சிதமே பாட்டு செம”.. ‘வாரிசு’ & ‘துணிவு’ ரெண்டுல எந்த படம் பாப்பீங்க ? - சசிகுமார் பதில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  'நான் மிருகமாய் மாற' திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

Advertising
>
Advertising

Also Read | "சொல்ல தான் முடியும்..".. அடுத்தடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் தனது 2 படங்கள் .. சசிகுமார் ஆதங்கம்.!

இதில் இப்படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில்,  “இயக்குனர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார். இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன்.” என குறிப்பிட்டிருந்தார்.

சசிகுமாருடன் ஹரிப்ரியா, விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், சசிகுமார் மீது சிவப்பு சாயம் கொண்ட ஒரு வாலியை ஊற்றுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு. இதுகுறித்து பேசும்போது எட்டு முதல் பத்து நாட்கள் வரை இதற்காக ரிகர்சல் செய்து சண்டைக்காட்சி உருவானதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இறுதியாக பேசிய சசிகுமார், “காமன் மேன் என்றுதான் இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு ‘நான் மிருகமாய் மாற’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என கூறினார்.

இதுகுறித்த பத்திரிகை சந்திப்பில் வாரிசு பட பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக பேசிய சசிகுமார், “எனக்கு பிடிச்சுது.. நான் ரசிச்சேன்” என்று குறிப்பிட்டதுடன், வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஒரே வேளையில்  பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆவது குறித்த கேள்விக்கு, “ரெண்டு படமே பார்ப்பேன்.. அஜீத் சாரும் பிடிக்கும். விஜய் சாரும் பிடிக்கும்” என பதில் அளித்தார். மேலும், ‘வாரிசு’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருக்கிறதா என்பது குறித்த விஷயத்தை விசாரித்துவிட்டு பேசுவதாக சசிகுமார் தெரிவித்தார்.

Also Read | வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை ஹரிஜா.. படு வைரலாகும் வீடியோ!

Sasikumar about varisu thunivu movie release in pongal

People looking for online information on M Sasikumar, Naan mirugamai maara will find this news story useful.