அயோத்தி படத்தின் வெற்றி.. இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார்! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.

Sasi Kumar Gifted a Gold Chain to Mandhira Moorthy
Advertising
>
Advertising

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி உள்ள 'அயோத்தி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Sasi Kumar Gifted a Gold Chain to Mandhira Moorthy

நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் சசிகுமார் சில நாட்களுக்கு முன் அளித்துள்ளார். அதில், அயோத்தி படம் குறித்து பேசிய சசிகுமார், "அயோத்தி படம் முதல் நாளில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் யாருமே இல்லை. உண்மையை சொனனா இதான். இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.  படத்திற்கு ப்ரோமோஷன் இல்லை.  நம்ம மார்க்கெட் நமக்கு தெரியும்ல. திடீரென வந்த போது, மக்கள் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்த்த பிறகு மக்கள் அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. மக்களே சிலர் டிக்கெட் எடுத்து கொடுத்து இந்த படத்தினை பார்க்க சொல்கிறார்கள்." என சசிகுமார் பேசியிருந்தார்.

அதேபோல் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை இயக்குனர் மந்திர மூர்த்தி அளித்திருந்தார். அதில் அயோத்தி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து பதில் அளித்த மந்திரமூர்த்தி, "சனி & ஞாயிறு அன்று படம் நல்லா இருக்கு. மக்கள் தியேட்டருக்கு வரவில்லை என்று தகவல்கள் வந்தன. திங்கள் கிழமை முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகள் அதிகமாகி உள்ளது என தயாரிப்பாளர் கூறினார். அது போல சில திரைப்படங்களில் பெரிய ஸ்கிரீன் மற்றும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது." என மந்திர மூர்த்தி பதில் அளித்திருந்தார்.


இந்நிலையில் தமது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குனர் மந்திர மூர்த்தி அயோத்தி படத்தின் வெற்றி விழாவில் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்போது நடிகர் சசிகுமார், இயக்குனர் மந்திர மூர்த்திக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மற்ற செய்திகள்

Sasi Kumar Gifted a Gold Chain to Mandhira Moorthy

People looking for online information on Ayodhi, Manthira Moorthy will find this news story useful.