பா‌. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை - 2.. போஸ்டருடன் வெளியான சூப்பர் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சானியா மிர்சா & மகேஷ் பாபுவுடன் A.R. ரஹ்மான் செல்ஃபி..! இணையத்தை கலக்கும் வைரல் போட்டோஸ்

இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை  இயக்கினார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில்  காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தற்போது நடிகர் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்தியேக போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் கபிலன் வடிவமைப்பு செய்துள்ளார்.

Also Read | "என்னோட ஏஞ்சல் பாய்".. செல்ல நாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை நஸ்ரியா!

தொடர்புடைய இணைப்புகள்

Sarpatta Parambarai Part 2 Movie Announcemen

People looking for online information on Arya, Pa Ranjith, Sarpatta Parambarai Part 2, Sarpatta Parambarai Tamil will find this news story useful.