அஜித் சார் சொன்னது இதான்.. "அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதீங்க".. வேம்புலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: "சார்பட்டா பரம்பரை" பட புகழ் வேம்புலி ஜான் கொக்கன் தனது சமூகவலைதளத்தில் அஜித் குறித்து கருத்து ஒன்றை பகிர்ந்தது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடையே இப்படத்தில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் அனைவரது மனதோடு ஒன்றி போனது. சார்பட்டா பரம்பரை வெளியானதில் இருந்தே இப்படத்தின் பீவர் யாரை விட்டும் விலகவில்லை. வீடியோ மூலம் ரீல்ஸ் விட்டு வைரல் ஆக்கினர்.

சார்பட்டா பரம்பரை வேம்புலி

மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இயக்கியிருந்தார் பா. ரஞ்சித். இப்படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கனை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. வேம்புலி கதாப்பாத்திரத்தில் வரும் ஜான் கொக்கன், ரியல் லைஃபில் பிரபல வி.ஜே பூஜாவை திருமணம் செய்து கொண்டவர். சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஜான்.

அஜித் சார் தான் இன்ஸ்பிரேஷன்

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கனுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில்,  "நடிகர் அஜித் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன், இந்த கதாப்பாத்திரத்தை அஜித்திற்கு டெடிகேட் செய்கிறேன்" என்று ஜான் கொக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது சமூகவலைதள பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து வீரம் படத்தில் அஜித் பேசிய வசனத்தை பகிர்ந்துள்ளார் ஜான் கொக்கன்.

"தல அஜித் சொன்ன வார்த்தைகள் தான் என்ன ஊக்குவிச்சது!" - 'வேம்புலி' ஜான் கொக்கன் Exclusive பேட்டி!

வாழு வாழ விடு

தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்க என்ன வேனா பண்ணுங்க , உங்களுக்கு புடிச்சத பண்ணுங்க; ஆனா அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதிங்க. வாழு, வாழ விடு - Ajith Kumar" என்று பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளும், நீங்க நல்லா வருவீங்க சார் கவலைப்படாதீங்க என்று கூறி வருகின்றனர். முன்னதாக சார்பட்டா படம் குறித்து Behindwoods தளத்திற்கு அளித்த பேட்டியின் போது, அஜித் குறித்து நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அஜித் தந்த அட்வைஸ்

அதில், 'வீரம்' பட ஷூட்டிங் டைம்ல அவர் எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தார். சினிமா துறைல எப்படி இருக்கணும். அவர் சொன்ன ஒரே ஒரு விஷயம் எப்பவும் மறக்க மாட்டேன். 'எல்லாம் நேரம்தான் ஜான். நேரம் வரும்! இப்படியே போயிட்டு இருங்க. Focus on Your Dream" என்று அஜித் கூறியதாக தெரிவித்திருந்தார். பின்பு சார்பட்டா படம் குறித்தும் வேம்புலி கதாப்பாத்திரத்தை அஜித் வெகுவாக பாராட்டியிருந்தது  குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 'கே.ஜி.எஃப்- 2', 'கப்ஜா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sarpatta Parambarai Movie actor John Kokkenn advised Ajith fans

People looking for online information on Ajith fans, Jhon Kokken, Sarpatta Parambarai, Twitter, Vempuli, Viral photo will find this news story useful.