பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ரங்கன் வாத்தியார்(பசுபதி) மனைவியாக நடித்து அவரது காலைத் தொடும் அந்த ஒரு சிறு காட்சி மூலம் நடிகையாக பிரபலமானவர் கீதா கைலாசம். எனினும் ரமணி Vs ரமணி, விடாது கருப்பு ஆகிய 90-களின் ஹிட் நாஸ்டால்ஜியா தொடர்களின் தயாரிப்பாளராக கீதா கைலாசம் நமக்கு புதியவர் அல்ல.
Also Read | மழைனா போதும் மெட்ராஸ் மக்களுக்கு பகோடா, டீ, ராஜா சார்.. ரசிகரின் கமெண்ட் ராஜாவின் ரியாக்ஷன்.!
நெட்பிளிக்ஸில் கடந்த வருடங்களில் வெளியான, ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தொடரில் , கீதா கைலாசத்தின் சித்ராம்மா எனும் கதாபாத்திரம் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றிவிட்ட இவரை சட்டென அடையாளம் காண முடிவதில்லை . ஆம், அப்படியே அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் தற்போது ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் வீட்ல விசேஷம். ஜூன் 17 முதல் திரையரங்குகளில் ஒளிரும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். Badhaai Ho என்கிற இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி மற்றும் NJ சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தின் க்ளைமாக்ஸில் வரும் ஊர்வசியின் லேபர் வார்டு காட்சிகளில் சிறிய வேடமே என்றாலும் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை கூட்டும் நர்ஸ் கதாபாத்திரத்தில் வேற லெவலில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
அதிலும், இவர் சத்யராஜை, "என்ன சார் கமான் கமான்னு.. இங்க என்ன கிரிக்கட் மேட்ச்சா விளையாடறாங்க?" என்று கோபமாக கேட்கும் அந்த வசனம் செம்ம ஹைலைட். அரங்கமே வெடித்துச் சிரித்த அந்த காட்சிகளை தன் பெர்ஃபார்மான்ஸால் நிரப்பியிருக்கிறார் கீதா கைலாசத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது பிரத்தியேகமாக நம்மிடையே சில சுவாரஸ்ய தருணங்களை பகிர்ந்து கொண்டார்,
அதில் அவர் பேசும்போது, “அந்த மருத்துவமனை காட்சியின் தொடக்கத்தில் நானும் பாலாஜியும் சத்யராஜ் சாரை பார்த்து ஏதோ பேசுவோம். அது என்னவென்று புரியாமல் சத்யராஜ் சார் பதட்டமாவார். அங்கேயே ஆரம்பிச்சிடுச்சு கலவரம், திரையரங்கத்தில் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. ஆனா அந்த காட்சியை என்னிடம் பாலாஜி சொல்லி நடிக்க சொல்லும்போது, எதுக்கு அப்படி நடிக்க சொல்றார்னே எனக்கு புரியல. தியேட்டரில் அந்த காட்சியை பார்க்கும்போது தான் அதை உணர்ந்தேன். படம் பார்த்தவர்களின் ரெஸ்பான்ஸும் அருமையா வந்திருக்கு.
ஒரு சிறிய ரோல் தான், ஆனால் முக்கியமான காட்சியில் முக்கியமான கதாபாத்திரம் அது என்றுதான் அழைத்தார்கள். சத்யராஜ் சார் அந்த லேபர் வார்டில், ஊர்வசியை மோட்டிவேட் பண்றேங்குற பேர்ல சொதப்புவார், மாத்தி மாத்தி ஒரு செயலை செய்தும், பேசியும் இரிட்டேட் பண்ணுவார். அவரை அடக்குற மாதிரி நான் கத்தணும். 2, 3 டேக் எடுத்தாலும் சத்யராஜ் சார், ஊர்வசி உட்பட அனைவருமே பெரிய நடிகர்கள் என்பதாக இல்லாமல் எனக்கு கம்ஃபோர்ட் ஸோன் கொடுத்தார்கள். ஆனால் கேரக்டராக அந்த காட்சியில் நாங்கள் அனைவருமே சீரியஸாக இருப்போம். ஊர்வசி வலியில் துடிக்க, நான் சத்யராஜ் சாரின் அலப்பறைகளால் கோபப்பட்டு கத்திக்கொண்டிருப்பேன். ஆனால் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சி அந்த அளவுக்கு சிரிப்பை வரவழைத்திருக்கும். அதுதான் அந்த காட்சியின் வெற்றி, படம் முழுவதும் இந்த ட்ரீட்மெண்ட்டும் கேரக்டர் ஸ்கெட்சும் தான் அந்த படத்தின் வெற்றி.
அடுத்ததா பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கேன். இதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், ‘மாமன்னன்’ படத்திலும் நடிச்சுட்டு இருக்கேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read | Ilaiyaraaja: "உங்கள் இதயத்தை தொட்ட தனுஷை பாராட்டுறேன்..!" - Fans-உடன் பேசிய இளையராஜா.!