சார்பட்டா பரம்பரை.. "சம்பவம் லோடிங்".. ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிச்சாச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் உருவாகியுள்ளது.

அட்ட்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில், பாக்ஸிங் வீரராக ஆர்யா நடிக்பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.



எண்பதுகளில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை வீரர்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் குத்துச் சண்டையில் மோதுகின்றனர்.  தமது 30வது படமான இந்த படத்தின் கேரக்டருக்காக, ஆர்யா தமது உடலை உடற்பயிற்சி செய்து குத்துச் சண்டை வீரருக்கான உடற்கட்டுடன் மாற்றி நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை இயக்குநர் பா.ரஞ்சித் தமது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் அறிவித்துள்ளார்.

ALSO READ: சூர மாஸ்!.. "GVM-ARR-STR"-ன் புதிய படத்தில் '2.O', 'பொன்னியின் செல்வன்' பிரபலமா?

தொடர்புடைய இணைப்புகள்

Sarpatta Parambarai amazon OTT release date announced

People looking for online information on Arya, Pa Ranjith will find this news story useful.