SARDAR : கார்த்தியின் ‘சர்தார்’ வெற்றி.. இயக்குநர் PS மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர்.

Sardar Producer presented new car to PS Mithran infront of Karthi ,Laxman , Prince Pictures
Advertising
>
Advertising

Also Read | Hansika Motwani Wedding: என் ஹன்சுவ எவ்ளோ ஹேப்பியா பாத்துக்குறார்..😍 நடிகையின் வைரல் Post.!

நடிகர் கார்த்தி நடிப்பில் 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Sardar Producer presented new car to PS Mithran infront of Karthi ,Laxman , Prince Pictures

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

ரிலீஸ்க்கு பிறகும், இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் PS மித்ரனுக்கு, தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து  தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடதக்கது. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, அறிவிக்கப்பட்டது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

Also Read | ‘அவருனு நெனைச்சுட்டேன்.. ’.. பிரபல நடிகரின் பெயர் கொண்ட ரசிகரிடம் ட்விட்டரில் பேசிய கமல்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sardar Producer presented new car to PS Mithran infront of Karthi ,Laxman , Prince Pictures

People looking for online information on PS Mithran, Sardar will find this news story useful.